வெள்ளி, 20 செப்டம்பர், 2013

அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....


புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

நலம் விசாரித்தல்
மனித சமுதாயத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும். சமுதாய நலன்களை முக்கியப்படுத்துவதிலும், மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது.

நோயாளியை நலம் விசாரிப்பது.
நோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக நிலைபற்றி விசாரித்து அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
1)நோயாளியை உடல் நலம் விசாரித்தல், 2) ஜனாஸாவை (நல்லடக்கம் செய்ய) பின் தொடர்ந்து செல்லுதல், 3) தும்மியவருக்கு (யர்ரஹ்முகல்லாஹ் எனக்கூறி) துஆச் செய்தல், 4) சத்தியம் செய்தவரின் சத்தியத்தை (அது நன்மையானதாக இருந்தால் அதனை) நிறை வேற்றி வைத்தல். 5) அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்தல், 6) அழைப்புக் கொடுத்தவருக்கு (விருந்துக்கு) பதிலளித்தல் 7) ஸலாமை (மக்களிடையே) பரப்புதல் ஆகிய (ஏழு) விஷயங்களை நபி(ஸல்) எங்களுக்கு ஏவினார்கள்.
அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஜிப்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக கியாமத் நாளில் அல்லாஹ் (மனிதர்களை அழைத்து) 'ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்கவில்லை?' என கேட்பான். அப்பொழுது அடியான், 'என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு உடல் நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று பதில் அளிப்பான். அப்பொழுது அல்லாஹ் 'என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான், அவனை நீ உடல் நலம் விசாரிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா? என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவைக் கேட்டேன், நீ எனக்கு உணவளிக்க வில்லை?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அடியான் 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும், நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் 'என் இன்ன அடியான் உன்னிடம் உணவைக் கேட்டான். நீ அவனுக்கு உணவை அளிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய்! என்பதை அறிவாயா?' என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் எனக்கு தண்ணீர் புகட்டுமாறு வேண்டினேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அடியான். 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு தண்ணீர் புகட்ட முடியும்! நீ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், 'என் இன்ன அடியான் உன்னிடம் தனக்கு தண்ணீர் புகட்டும்படி வேண்டினான். நீ அவனுக்கு தண்ணீர் புகட்ட மறுத்து விட்டாய்! நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?' என்று கூறுவான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
இந்த நபிமொழியிலிருந்து விளங்கக்கூடிய சில உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .
ஒருவர் நோயாளியாகி விட்டால் அவரை நலம் விசாரிப்பது எவ்வளவு
பெரிய மகத்துவம் நாளை மறுமையில் அல்லாஹ் மனிதனிடம் எப்படி
நலம் விசாரிக்கிறான் என்பதை நன்றாக உணர முடிகிறது.
நலம் விசாரிப்பது,பசித்தவருக்கு உணவு அழிப்பது,தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டுவது, இது போன்ற கேள்விகளை அல்லாஹ் தனது
அடியானுக்கு உவமானமாகக் கேக்கிறான் என்பதை அல்லாஹ்வின்
அடியான் புரிந்து தன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் இந்த நபிமொழியில் காணமுடியும்.

நோய் விசாரிக்கச் செல்வதால் ஏராளமான நன்மைகள்.

நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை உடல் நலம் விசாரித்தால், அவரிடமிருந்து அவர் திரும்பும் வரை 'குர்பத்துல் ஜன்னா'வில் ஆகிடுவார். அல்லாஹ்வின் தூதரே 'குர்பத்துல் ஜன்னா' என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அது சுவர்க்கத்தில் பறிக்கப்பட்ட கனிகள் ஆகும் எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : தவ்பான்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்

சுப்ஹானல்லாஹ் ,அல்லாஹ்வின் அருளை எந்த அளவுக்கு ஒரு முஃமீன் பெற்றுக்ககொள்ள வேண்டும் என்பது இந்த ஹதீஸின் விளக்கமாகும் சுவர்க்கத்தில் குர்பத்துல் ஜன்னா என்று சொன்னால்
அது சுவர்க்கத்தி்ல் பறிக்கப்பட்ட கனிகள் இதில் நோயாளியை நலம்
விசாரிக்கச் சென்றவர் இந்தப் பாக்கியத்தை அடைந்து கொள்கிறார்.
நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள்.
அறிவிப்பாளர் : அலி(ரலி)
ஆதாரம் : திர்மிதி

நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் அவர் திரும்பி வரும் வரை
அவறுக்காக மலக்குமார்கள் பிராத்தை செய்வார்கள் .
இன்று நமது வாழ்க்கையை சற்று உற்று நோக்க வேண்டும் .
எந்த நோக்கத்துக்காக ஒரு அடியான் நலம் விசாரிக்கச்செல்கிறான் என்றால் நான் பணத்தில் பெரியவன் என்னை மக்கள் மதிக்க வேண்டும்.
நல்லவன் என்று சொல்ல வேண்டும். புகழ் கிடைக்க வேண்டும்.
நான்கு பேர் சொல்ல வேண்டும் இந்த மனிதர் இன்றைக்கு இந்த நோயாளியை நலம் விசாரித்தார் என்று சொல்ல வேண்டும் என்ற
நோக்கங்களும். நாளை மறுதினம் மேடைகளில் பேசும் போது இன்ன
மனிதர் நோயாளியாக இருந்தார் யாருமே போக வில்லை நான் போனேன். என்று சத்தமாக பேசுவதையும் நாம் பார்க்கிரோம்.
நஊதுபில்லாஹ் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். நபியவர்கள்
சொன்னார்கள் எண்ணங்களைக்கொண்டே கூலி கொடுக்கப்படும் என்று
நபியவர்கள் அருமையான முறையில் சொல்லி இருக்கும் நபிமொழியை நாம் எல்லோரும் அறிந்து தெரிந்து வைத்திருக்கின்றோம்.
மலக்குமார்களின் பிராத்தனைக்கு நாம் ஆலாக வேண்டுமானால்
நல்லன்னத்தோடு நலம் விசாரிக்க வேண்டும்.

நோயாளிக்கு ஆறுதல் கூற வேண்டும்.

ஒருவர் நோயாளியை நலம் விசாரிக்கச்சென்றால் அவரிடத்தில் அறுதலான வார்த்தைகலை முன் வைக்க வேண்டும். அவருடைய
மனம் சந்தோஷம் அடைகின்ற நல்ல பல வார்த்தைகளை கூறி அவருக்காக துஆ செய்ய வேண்டும்.

ஒரு காட்டரபி நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது நபி(ஸல்) அவர்கள், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் நோயாளியை உடல் நலம் விசாரிக்கச் சென்றால், லாபஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ் (பரவாயில்லை)
'அல்லாஹ் நாடினால், குணமாகும்' எனக் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி

நபி(ஸல்) அவர்களிடம் யாராவதொருவர், தம் நோயைப் பற்றியோ, தம் புண்ணைப் பற்றியோ, காயத்தைப் பற்றியோ முறையிட்டால், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் நடுவிரலை பூமியில் வைத்து பின்னர் உயர்த்தி 'பிஸ்மில்லாஹ் துர்பத்தி அர்ளினா, பிரீகதி பஃளினா யுஷ்பா பிஹி ஸகீமுனா பிஇத்னீ ரப்பினா'
பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால், (இது) எங்கள் பூமியின் மண், எங்களில் சிலரின் எச்சியுடன் கலந்துள்ளது. எங்கள் இரட்சகனின் கட்டளையால், இதனைக் கொண்டு எங்களின் நோயாளி குணமடைவார் என கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் தம் உடலில் ஏற்படும் வலியைப் பற்றி முறையிட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உம் உடலில் வலிக்கின்ற இடத்தில் உம் கரத்தை வைப்பீராக! பிஸ்மில்லாஹ் என மூன்று முறை கூறுவீராக!' மேலும் ''அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத் ரதிஹி மின்ஷர்ரி மாஅஜிது வவுஹாதிரு'
பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் சக்தியையும் கொண்டு நான் அடையும் வேதனையின் தீங்கை விட்டும், நான் பயப்படும் விஷயங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று ஏழு முறை கூறுவீராக!
அறிவிப்பாளர் : அபூ அப்தில்லாஹ் உத்மான் பின் அபில் ஆஸ் (ரலி)
அதாரம் : முஸ்லிம்
நோயாளிக்காக பிராத்தை செய்வதை நபியவர்கள் நமக்கு காட்டி இருக்கிறார்கள் .குறிப்பிட்டவர் மாத்திரம் தான் துஆ செய்ய வேண்டும்
என்றில்லை நலம் விசாரிக்கச் சென்றவர் யாராயினும் சரி நோயாளிக்கு
துஆ செய்ய முடியும்.

எனவே அல்லாஹ் நம்மை இழ்வுலகத்தில் ஒரு உன்னத நோக்கத்துக்காப் படைத்திருக்கிறான்.
அதிலும் அல்லாஹ் மனிதனுக்கு சில கடமைகளையும்,பொறுப்புக்களையும் வழங்கி இருக்கிறான்.
ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் ஜெய்ய வேண்டிய கடமைகள்.
அல்லாஹ் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.
மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.
என்று பல கடமைகலையும், உரிமைகளையும் அல்லாஹ் மனிதனுக்கு
வழங்கி இருக்கிறான். இதில் மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய
கடமைகள் மேலே கூறப்பட்டவைகள் இந்தக் கடமைகளை முறையாக
ஒரு மனிதன் செய்யும் போது அதற்கு நன்மைகள் வழங்குவது அல்லாஹ்வின் தனிப்பட்ட கடமை.

எனவே வாழ்ந்து விட்டோம் அதிகமான காலங்கள், வீணாகி விட்டது
அதிகமான நேரங்கள். வாழப்போவது குறிகிய காலங்கள் அந்தக் கால்ப்பகுதியில் ஏராளமான நந்மைகளை நாமும் செய்து பிரரையும்
அதன் பக்கம் அழைக்கக்கூடிய நன் மக்களாக வல்லவன் அல்லாஹ்
நம் எல்லோரையும் மாற்று வானாக .ஆமீன்