வியாழன், 12 செப்டம்பர், 2013

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ்...

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!
 

எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.

 

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.

 

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

 
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.

 
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.

 
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.

 
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.

 
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

 
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

 
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.

 
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.

 
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.

 
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.

 
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

 
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

 
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்கப்  பயிற்சியும் ஆகும்.

 
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.

 
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.

 
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

 
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

 
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.

 
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.

 
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.

 
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

 
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.

 
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.

 
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.

 
26. இறைவனின் உதவி எனும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.

 
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.

 
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.

 
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

 
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள்.

 ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
 
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.

 
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.

 
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.

 
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.

 
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.

 
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.

 
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.


 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
 
39. தீமைக்கு பின் அதை அழிக்க நன்மையை செய்யுங்கள்.

 
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.

 
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

 
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.

 
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.

 
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.

 
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

 
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

 
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.

 
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.

 
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.

 
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

 
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.

 
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.

 
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.

 
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்

 
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.

 
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.

 
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.

 
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.

 
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.

 
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.


யா அல்லாஹ்! உனது தூதர்,  உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக!! ஆமீன்!!

வியாழன், 5 செப்டம்பர், 2013

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அல்ஹம்துல்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللَّهُ
இதன் பொருள் :
அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ .
இதன் பொருள் :

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக! ( ஆதாரம்: புகாரி 6224 )

தும்மல் வந்தால் ( தும்மிய பின்)

الْحَمْدُ لِلَّه அல்ஹம்து ல்லாஹ் எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய
ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான். ( ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390 )

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي

இதன் பொருள் :
இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.

இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!

இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக. ( ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390 )

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்

மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்


اللَّهُ أَكْبَر அல்லாஹு அக்ப(B)ர் அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்

பிராணிகளை அறுக்கும் போது

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ

இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற வேண்டும்.( ஆதாரம்: புகாரி 5565, 7399 )

வெளியூரில் தங்கும் போது
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
இதன் பொருள் :
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.( ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882 )
பயணத்திருந்து திரும்பும் போது
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

இதன் பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். ( ஆதாரம்: முஸ்லிம் 2392 )
மழை பொழியும் போது

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
இதன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! (ஆதாரம்: புகாரி 1032 )
அளவுக்கு மேல் மழை பெய்தால்

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا

இதன் பொருள் :
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! (ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)

அல்லது
اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

இதன் பொருள் :
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.(ஆதாரம்: புகாரி 1013, 1016 )
அல்லது
اللَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ وَالْآكَامِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
( ஆதாரம்: புகாரி 1017 )

மழை வேண்டும் போது
இரு கைகளையும் உயர்த்தி


اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا இதன் பொருள் : இறைவா! எங்களுக்கு மழையைத் தா. (ஆதாரம்: புகாரி 1013)
அல்லது
اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ( ஆதாரம்: புகாரி 1014 )

இழப்புகள் ஏற்படும் போது

இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(ஆதாரம்: முஸ்லிம் 1525)

اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

இதன் பொருள் :நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூ தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.(ஆதாரம்: முஸ்லிம் 1525 )
 
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي

இதன் பொருள் :இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! எனக் கூற வேண்டும்.(ஆதாரம்: புகாரி 5671, 6351 )
 
நோயாளியை விசாரிக்கச் சென்றால்

اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أَنْتَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

இதன் பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 5742)
அல்லது
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! ( ஆதாரம்: புகாரி 5743 )
அல்லது நோயாளியின் உடல் கையை வைத்து
بِسْمِ اللَّه பி(B)ஸ்மில்லாஹ் என்று மூன்று தடவை கூறி விட்டு
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِر - என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.
இதன் பொருள் : நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ( ஆதாரம்: முஸ்ம் 4082 )
அல்லது
لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ -
இதன் பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக் கூறலாம். (ஆதாரம்: புகாரி 3616)
கெட்ட கனவு கண்டால்  
மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு

أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ - அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 6995)

கழுதை கணைக்கும் போது

أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ - அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 3303 )
 
கோபம் ஏற்படும் போது
َ أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ -
இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ( ஆதாரம்: புகாரி 3282)
அல்லது
أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ -. (ஆதாரம்: புகாரி 6115 )
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்
بِسْمِ اللَّه - பி(B)ஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும். ( ஆதாரம்: புகாரி 3280, 5623)
 
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்

بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.( ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396)
அல்லது
بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக. ( ஆதாரம்: புகாரி 5165, 3283)   
உணவளித்தவருக்காக
 
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
இதன் பொருள் :இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக. ( ஆதாரம்: முஸ்லிம் 3805 )

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

இதன் பொருள் : தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல. ( ஆதாரம்: புகாரி 5458)
அல்லது
الْحَمْدُ لِلَّهِ - அல்ஹம்து ல்லாஹ் என்று கூறலாம். (ஆதாரம்: முஸ்லிம் 4915)

பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ -

இதன் பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 1165 )
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ -

இதன் பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 1165)
சபையை முடிக்கும் போது

ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(ஆதாரம்: திர்மிதீ 3355)

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

இதன் பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

இதன் பொருள் வருமாறு: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.(ஆதாரம்: நஸயீ 1327 )
வீட்டிருந்து வெளியே செல்லும் போது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்.(ஆதாரம்: நஸயீ 5391, 5444)
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

இதன் பொருள்:
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
 
கழிவறையிருந்து வெளியேறும் போது

غُفْرَانَكَ - ( ஆதாரம்: திர்மிதீ 7 )
இதன் பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.
தினமும் ஓத வேண்டிய துஆ பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
( ஆதாரம்: புகாரி 3293)
இதன் பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
 
இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை

ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
َ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي

(ஆதாரம்: புகாரி 1154)

இதன் பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.
 
தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன் கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள்.
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّونَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
( ஆதாரம்: புகாரி 6317, 7429, 7442, 7499 நஸாயி 1601)
இதன் பொருள்:
இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

காலையில் ஓதும் துஆ
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ قَالَ أُرَاهُ قَالَ فِيهِنَّ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
(ஆதாரம்: முஸ்லிம் 4901)

இதன் பொருள்:
நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழ னைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடு கிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறை யின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
 
மாலையில் ஓதும் துஆ
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
َ أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ قَالَ أُرَاهُ قَالَ فِيهِنَّ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

இதன் பொருள்:
நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ

 
காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(ஆதாரம்: நஸயீ 5333)
அந்த அத்தியாயங்கள் வருமாறு:

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ(1)اللَّهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ(3)وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
112 வது அத்தியாயம்
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

113 வது அத்தியாயம்
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلَهِ النَّاسِ(3)مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ(4)الَّذِي يُوَسْوِسُ فِيصُدُورِ النَّاسِ(5)مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395)
இதன் பொருள்:
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
 
தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ
 
1, வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்
ُ قَالَ اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ

இதன் பொருள் : இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 4887)
2, வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنْ الْفَقْرِ

இதன் பொருள்:
இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 4888)
3, படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

இதன் பொருள்:
என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! (ஆதாரம்: புகாரி 5845)
4, பி(B)ஸ்மில்லாஹ்
எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு பின் வரும் துஆவை ஓதலாம்.
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبِّي بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

இதன் பொருள்:
என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! (ஆதாரம்: முஸ்லிம் 4889)

5, தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 3275)
ஆய(த்)துல் குர்ஸீ வருமாறு:

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

இதன் பொருள்:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.( திருக்குர்ஆன் 2:255 )
6, பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (ஆதாரம்: புகாரி 4008, 5010, 5040, 5051)

இரவில் ஓதினால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால் மஃரிப் முதல் சுப்ஹ் வரை இதை ஓதிக் கொள்ளலாம்.
அந்த வசனங்கள் வருமாறு:
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

இதன் பொருள்:
இத்தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர்.(திருக்குர்ஆன் 2:285)
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

இதன் பொருள்:

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).(திருக்குர்ஆன் 2:286)

7, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள்.(ஆதாரம்: புகாரி 5018, 5748, 6319)
அந்த அத்தியாயங்கள் வருமாறு:

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ(1)اللَّهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ(3)وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
112 வது அத்தியாயம்

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!
113 வது அத்தியாயம்
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلَهِ النَّاسِ(3)مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ(4)الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ(5)مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
114வது அத்தியாயம்
8, நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு பின்னர் வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவை ஓது! நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டும் படுத்து அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(ஆதாரம்: புகாரி 247, 6313, 6315, 7488, 6311, 7488)
அந்த துஆ இது தான்.

اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ

புதன், 4 செப்டம்பர், 2013

துஆக்களின் சிறப்பு ,

அஸ்ஸலாமு  அழைக்கும்.(வரஹ்.....)
 இறைவனிடம்   கை   ஏந்துங்கள்,                                                              
      நாம்  இறைவனின்  தியானத்தை  தவிர  வேறு  எதிலும் மன  அமைதி  காண  முடியாது .
     அல்லாஹ்வை  நினைவு  கூர்வதை  கொண்டுதான்  இதயங்கள்  அமைதி  பெறுகின்றன
      அல்லாஹ்வை  உள்ளத்தாலும்,நாவினாலும்,தனித்தனியே  தியானம் செய்யலாம் என்றாலும, உள்ளமும்,நாவும்,சேர்ந்து முழு  மனதோடு  கேட்கப்படும்  துஆ  தான் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படும்.
     அல்லா  கேட்டதையே  கொடுக்கின்றான் . அல்லது அதைவிட  
சிறந்ததை  கொடுக்கின்றான். அல்லது  அந்த  துஆவைக்   கொண்டு வர 
இருக்கின்ற ஆபத்தை நீக்குகின்றான் என ரசூல்{ஸல்}அவர்கள் கூறினார்கள்.
       நாம்  துஆ  செய்யும்போது இரு கைகளையும்  தோல்,புஜம் வரை உயர்த்தி  முகத்திற்கு நேராக வைக்க வேண்டும்.கிப்லாவை நோக்கி துஆ 
செய்வது சிறந்தது.துஆ கேட்பதற்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.
பின்  ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓத வேண்டும்.பின் மிகவும் 
தாழ்மையுடனும்,அச்சத்தோடும் துஆ கேட்கவேண்டும் .
        துஆ முடிந்த பிறகு மீண்டும் அல்லாஹ்வை புகழ்ந்து,பின்  
ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓதி,ஆமீன் கூறி தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.
        அடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு 
        அவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு அல்லா 
        வெட்கப்படுகிறான் என்று ரசூல்{ஸல்}கூறியுள்ளார்கள் .  

 சில நேரங்களில் செய்யப்படுகின்ற துஆ ஏற்று கொள்ளப்படுகின்றது .அவற்றில் சில கீழே எழுதப்பட்டு உள்ளன .மனதில் வைத்து கொள்ளவும்.
  1. பாங்கிற்கும் , இகாமத்திற்கு இடையில்   கேட்கப்படும்  துஆ ,
  2.  பர்ளு  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  3.  தஹஜ்ஜ்த்  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  4. சஜ்தாவில்   கேட்கப்படும்  துஆ 
  5. நோன்பு   திறக்கும்  முன்   கேட்கப்படும்  துஆ .  

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பல்வேறு விதமான சோதனைகளும் அதன் பயன்களும்

இறைவன் தனக்கென வடிவமைத்துள்ள வழிமுறைகளுக்கு அமைவாகவே இந்த உலகின் அனைத்து செயற்பாடுகளையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான். அந்த வகையில் மனிதர்களை மாறி மாறி பல்வேறு முறைகளில் சோதிப்பதும் அவனின் வழிமுறையாகும். இந்த உலகில் மனிதர்கள் நிம்மதி, சந்தோசம், பிரச்சினைகள், சிக்கல்கள் என என்னிலையில் வாழ்ந்தாலும் அனைவரும் அவரவருக்கென இறைவன் விதித்தபடி சோதிக்கப் படுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியமாகும். எனவே ஏழ்மை, கஷ்டம் மற்றும்  நோயில் வாழ்கிற ஒருவரும் செல்வ செளிப்புடன் ஆரோக்கியமாக வாழும் ஒருவரும் முறையே சோதிக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவ்விருவரிடையே இவ்வாறான நிலைமைகளை மாறி மாறி வரச் செய்வதும் இறைவனின் வழிமுறையாகும். சிலருக்கு இறைவன் குடும்பம் குழந்தைகளை கொடுத்தும் சோதிப்பான், சிலரை தனிமை படுத்தியும் சோதிப்பான். ஆக இந்த உலக வாழ்க்கை முழுவதும் சோதனைக்கான காலமாகும். இந்த உண்மைகளையே பின்வரும் இறைவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல் குர்ஆன் 21:35)
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் – அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல் குர்ஆன் 64:15)
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் குர்ஆன் 2:155(  
இந்த உலகையும் அதன் செயற்பாடுகள் அனைத்தையும் மனிதர்களுக்காக படைத்த இறைவன் இவ்வாறு அவன் மனிதர்களை சோதிப்பதிலும் பல   நன்மைகளை அவர்களுக்காக ஏற்படுத்தி வைத்துள்ளான். அதனை அவ்வப்போது அவர்கள் புரிந்து கொள்ளாத போதும் எதிர் காலத்தில்  தெளிவு பெற வாய்ப்புள்ளது. பல்வேறு சந்தர்பங்களில் எத்தனையோ உபதேசங்கள், போதனைகள்  மூலம் ஏற்படாத தாக்கங்கள், மாற்றங்கள், படிப்பினைகள், தெளிவுகளை எல்லாம் ஓரிரு சோதனைகள், கஷ்டங்கள் மூலம் மனிதர்கள் அடைந்து கொள்வதை எமது வாழ்வில் காண்கிறோம். அவ்வாறு ஏற்படும் சில சோதனைகள் மற்றும் அதன் மூலம் மனிதர்கள் பெரும் பயன்களை பின்வருமாறு இஸ்லாம் தெளிவு படுத்துகிறது.
மனிதர்கள் உணர்ந்து திருந்துவதற்கான சோதனை 
மனிதர்கள் இறைவனை மறந்து, அவனின் கட்டளைகளை துறந்து வாழும் போது அவர்கள் உணர்வு பெற்று, இறைவனை ஞாபகப் படுத்தி, அவனின் பால் பணிந்து மீண்டு வருவதற்காகவும் இறைவன் மனிதர்களை சோதிப்பான் என்ற செய்தியை பின்வரும் இறைவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல் குர்ஆன்  30:41)  
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல் குர்ஆன்  7:94(
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு. (அல் குர்ஆன்  6:42)
அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் – அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம். (அல் குர்ஆன் 7:168)
இப்படியாக இறைவன் சோதனைகளை இறக்கியும் உணர்வு பெற்று திருந்தாதவர்களுக்கு உலகின் சில இன்பங்களை அனுபவிக்கச் செய்து விட்டு பிறகு தண்டனையை இறக்கி அவர்களை வேரறுத்து விடுகிறான் என்ற உண்மையை இறைவன் எமக்கு பின்வருமாறு புரிய வைக்கின்றான்.
நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான். (அல் குர்ஆன்  6:43)
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர். (அல் குர்ஆன்  6:44)
எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.” (அல் குர்ஆன்  6:45)
இதே அடிப்படையில் தான் தன்னை முற்றிலும் நிராகரித்து வாழ்கிறவர்களுக்கு இறைவன் உலக பாக்கியங்களை வழங்குகிறான். இதனைப் பார்த்து உண்மை விசுவாசிகளான நாம் ஏமார்ந்து விடக் கூடாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நிராகரிப்பாளன் ஏதேனும் ஒரு நனமையை செய்தால், அதன் பிரதி பலனை அவனுக்கு உலகிலேயே அல்லாஹ் கொடுத்து விடுகிறான். அதே நேரத்தில் ஒரு முஃமின் செய்யும் நன்மைகளுக்கான பலனை மறுமைக்காக இறைவன் சேமித்து வைக்கின்றான். மேலும் இவ்வுலகிலே அந்த முஃமினுக்காக இறைவன் அவனை வழிப்படுவதற்கான வாழ்வாதாரத்தையும் (றிஸ்க்) வழங்குகிறான். (முஸ்லிம்)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான்.
(அறிவிப்வர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி).
உண்மையாளர்களையும் பொய்யர்களையும் பிரித்தரிவதற்கான சோதனை   
இறை விசுவாசியைப் போன்று  நமது நண்பர்களாக நேர்மையான வர்களாக நடித்துக் கொண்டு உள்ளத்தில் நயவஞ்சகத்தையும், குரோதத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு எம்முடன் ஒன்றர கலந்து வாழ்கிற எத்தைனையோ எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் தமக்குள் மறைத்து வைத்திருக்கும் விஷத்தை கக்கி முஸ்லிம்களை அழிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இவர்களின் முகத்திரைகளை களைந்து அவர்களின் உண்மை முகத்தை அம்பலப் படுத்துவதற்காகவும் இறைவன் மனிதர்களை சோதிப்பான். இதன் மூலம் உண்மையான இறைவிசுவாசி யார்? நயவஞ்சகர்களான இஸ்லாத்தின் எதிரிகள் யார்? என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படியான கயவர்களை எத்தனையோ சோதனைகள், பிரச்சினைகளின் போது தான்  நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.  இதனையே பின்வருமாறு அல் குர்ஆன் தெளிவுபடுத்துகிறது :
 “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல் குர்ஆன்  29: 2,3 )
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (அல் குர்ஆன்  3:179)
நல்லடியார்களை தூய்மைப் படுத்தி  உயர்வைப் பெற்றுத் தருவதற்கான சோதனை 
இறைவனின் அன்பிற்குரிய நல்லடியார்களை அவர்களின் பாவங்களை மன்னித்து தூய்மைப் படுத்தி அவர்களுக்கு மேலதிக அந்தஸ்தத்தையும், உயர்வையும் பெற்றுக் கொடுத்து மனித புனிதர்களாக மாற்றுவதற்காகவும் இறைவன் சோதிப்பான். இவர்கள்  மற்றவர்களை விடவும் சற்று அதிகமாகவே சோதிக்கப் படுவார்கள். இந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தை தமது வாழ்வு நெறியாக ஏற்று அதனை முழுமையாக பின்பற்றி வருகிற உண்மை முஸ்லிம்கள் சோதிக்கப் படுகின்றார்கள். இவர்கள் ஏனையோரை விடவும் அதிகமான சவால்கள், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வருவது கண்கூடானதாகும்.  இவ்வாறான சோதனைகளின் போது அல்லாஹ்வுக்கு முற்றிலும் அஞ்சி மேலும் தமது ஈமானைப் பலப் படுத்திக் கொண்டு  பொறுமையை கடைப் பிடித்து வாழும் போது இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு  உன்னத அந்தஸ்தத்தையும், உயரிய நன்மைகளையும் பெற்றுக் கொடுக்கின்றான்.  இந்த விபரங்களையே பின்வரும் திரு வசனம், மற்றும் செய்திகள் உணர்த்துகிறன.
 (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல் குர்ஆன்  3:186)
இறைவன் யார் மீது நலவை நாடுகிறானோ அவரை (பல வழிகளிலும்) சோதிப்பான் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைராஹ் (ரழி), நூல்: புகாரி)  
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் “யா ரசூலல்லாஹ்! மனிதர்களில் அதிகம் சோதிக்கப் படுகிறவர்கள் யார்?” என வினவினேன். அதற்கு அவர்கள்: “நபி மார்கள், அதற்கு பிறகு அடுத்தடுத்த அந்தஸ்தில் உள்ளவர்கள், ஒவ்வொருவரும் அவர்களின் மார்க்க பற்றுதலுக்கு அமைவாகவே சோதிக்கப் படுவார்கள். ஒருவர் மார்கத்தை திடமாக பின்பற்றுகிறார் என்றால் அவரின் சோதனையும் கடுமையாக அமையும். அதே போன்று ஒருவர் சாதரணமாக மார்கத்தை பின்பற்றுகிறார் என்றால் அவரின் சோதனையும் இலகுவாக அமையும். மேலும் அந்த நல்லடியார்  எந்த பாவங்களும் அற்ற நிலையில் பூமியில் நடந்து செல்லும் வரை அவர் இவ்வாறு சோதிக்கப் பட்டுக் கொண்டே இருப்பார்.”  என பதிலளித்தார்கள். (திர்மிதி)
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை.
என நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள். (நூல்: புகாரி)  
சோதனைகளில் பொறுமை காப்பதென்பது சோதனைகள் மற்றும் சிக்கல்களுக்கு தம்மைத்தாமே ஆளாக்கிக் கொள்வதையோ, அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொல்லாமல் இருப்பதையோ குறிக்காது. சிக்கல்கள் வரும் என்ற நிலை இருக்கும் போது முடியுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதோடு, அது ஏற்பட்டு விட்ட நிலையில் அதிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கான இஸ்லாம் கூறும் முறையான அணுகுமுறைகளை கையாள்வதும் அவசியமாகும். உதாரணமாக நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற்று ஆரோக்கியமாக வாழ முயற்சிக்க வேண்டும். அதனையும் மீறி நோய்கள் ஏற்பட்டு விட்டால் அதற்கு சிகிச்சைப் பெறுவதும் அதன் மூலம் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு  அதற்கான நன்மைகளை இறைவனிடம் எதிர்பார்த்து நிற்பதும் அவசியமாகும்.